நாடாளுமன்ற தேர்தல் தேதி…. நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்.15-ல் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்தது ஏன்ப என்பது குறித்தும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாகவே புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது அந்த இடத்திற்கு நேற்று 2 ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு: ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து . இவர்கள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள். இவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு, ஜனாதிபதி முர்மு, ஆணையர்கள் தேர்வுக்கு ஒப்புதல் அளித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை இருவரும் டில்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் 11 மணிக்கு 3 ஆணையர்களும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மாலை 3 மணிக்கு இந்தியாவின் மக்களவை தேர்தல் தேதி், அட்டவணைைய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் ெ தரிவித்துள்ளது.