மக்களவை தேர்தல் தேதி கடந்த 16ம் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பணம் எடுத்து செல்கிறவர்கள் அதற்கான ஆவணங்களை எடுத்து வரவேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். இதனால் வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ரூ.1 லட்சம் வரையாவது எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். எனவே விரைவில் ரூ.1 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதி வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.