வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டு துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ், செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி ஆகியோர் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் -2024, மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம் என்ற மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கையெழுத்திட்டு துவக்கி வைத்ததை தொடர்ந்து, தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பின்னர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தில் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையத்தினை சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர்
அவர்கள் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை பார்வையிட்டு அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி.ராஷ்மி ராணி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொ) ராமலிங்கம், ஷீஜா (உடையார்பாளையம்), மாவட்ட வழங்கல் அலுவலர் (பெரம்பலூர்) சுந்தர்ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்திரசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் (புவனகிரி) ராஜீ, உதவி ஆணையர் (கலால்) காட்டுமன்னார்கோவில், சந்திரகுமார் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.