கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக அவர் மீது காந்தி மார்க்கெட் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 1-வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இனிக்கோஇருதயராஜ் நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு ஆஜரானார்.வழக்கின் விசாரணையை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். அப்போது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன், மாநில துணை அமைப்புச் செயலாளர்கள் அலெக்ஸ்,ஷாம் மற்றும் தன்ராஜ், ஜான் பிரகாஷ், கனகராஜ், ஜேம்ஸ், தினகரன், ஜெரால்டு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் உள்ளிட்டவர்கள் திரண்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.