தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 20ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டது. தமிழ்நாடு முழுவதும் கலெக்டர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை, காவல்துறை, வளர்ச்சித்துறை, கல்வித்துறை அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் பணிக்காக செல்லும் வாகனங்களில் தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும்.
போக்குவரத்து நெரிசல்களில் இவர்களது வாகனங்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக வாகனங்களில் அந்த ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் தொன்று தொட்டு பழக்கத்தில் இருக்கிறது. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டும் வாகனங்கள் அரசு வாகனமாக இருக்க வேண்டும். அல்லது அரசு பணிக்கு கான்ட்ராக்ட் எடுத்த வாகனங்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதிகாரியின் பெயரில் உள்ள சொந்த வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. ஏனென்றால் அந்த வாகனத்தை அதி்காரி தன்னுடைய சொந்த வேலைக்கு பயன்படுத்தலாம், அவரது குடும்பத்தினர் பயன்படுத்தலாம்.
எனவே அரசு வாகனத்தில் மட்டுமே ஒட்டவேண்டிய ஸ்டிக்கரை திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் தனது சொந்த காரில் ஒட்டி உள்ளார். இது தேர்தல் விதிக்கு முரணானது என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.