அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் துவக்கி வைத்தார். இப்பேரணி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அரியலூர் அண்ணாசிலை அருகில் முடிவடைந்தது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 100 மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லையினை மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் ஒட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கையெழுத்து இயக்க வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.