புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம், இளம் தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் -தேசத்தின் பெருமிதம் என்ற மாபெரும் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி, தனி வட்டாட்சியர் சோனை கருப்பையா மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் உள்ளனர்.