சென்னை கிண்டியில் அமித்ஷா-ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமித்ஷா கூறியதாவது… தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணி இணைந்து தேர்தலை சந்திப்போம். கூட்டணி கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். இணைந்து தான் நாங்கள் வெற்றி பெற போகிறோம். கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. கூட்டணிக்காக அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. இருவருக்குமே இந்த கூட்டணி பலனளிக்கும் என்று இவ்வாறு தெரிவித்தார்.