நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்,ஆந்திரா அல்லது புதுச்சேரியில் இருந்து தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “பாஜக தலைமை எனக்கு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. எதில் போட்டியிடுவது என 10 நாட்களுக்கும் மேலாக யோசித்தேன். இறுதியில், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால், நான் போட்டியிடவில்லை என்று தலைமையிடம் தெரிவித்து விட்டேன்.”என்று பதில் அளித்தார்