Skip to content

2 டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி… தஞ்சையில் பரிதாபம்….

தஞ்சாவூர் சுண்ணாம்புக்காரத் தெரு அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சேகர் (70). இவர் கொடிமரத்து மூலை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, இவரது இரு சக்கர வாகனம் மீது கரந்தை பகுதியிலிருந்து கொடி மரத்து மூலை பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த சேகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!