தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் கந்தர்வக்கோட்டை போன்ற இடங்களில் இருக்கும் கோழிப் பண்ணைகளில் இருந்து முட்டை கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை ரூ. 4. 60 காசுகள் இருந்தது.
தற்போது தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என். இ. சி. சி) கூட்டத்தில் விலையை சற்று குறைத்து ரூ. 4. 40 ஆகவிலை நிர்ணயம் செய்தது. இதனால் மொத்த கடைகளில் ரூ. 5க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை தற்போது 40 காசு குறைந்து ரூ. 4. 60-க்கு விற்பனையாகிறது.
இதனால் சில்லறை வியாபாரிகள் மொத்தமாக வாங்கும் ஒரு ஒரு அட்டை (30 முட்டை) ரூ. 150-க்கு விற்பனையான நிலையில், விலை குறைந்து தற்போது ரூ. 138க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ. 6க்கு விற்பனையான முட்டை விலை குறைந்து ரூ. 5 அல்லது 5. 50 போன்ற விலைகளில் விற்பனையாகிறது. இந்த விலை நேற்று முதல் அமலுக்கு வந்தது.