Skip to content

ஈட்டி எறிதல் போட்டி… கரூர் அருகே எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் துவங்கி வைத்தனர்..

  • by Authour

கரூர் மாவட்டம் தளவாபாளையம் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி மேயர் கலந்து கொண்டு ஈட்டி எறிந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

கரூர் மாவட்டம் தளவா பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக இந்தியாவின் தங்கமன் நீரஜ்சோப்ரா 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் தங்கப்பதக்கம் வென்றதை

கொண்டாடும் வகையில் இன்று இரண்டாவது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இப்போ போட்டியில் 16,18,20 வயதுடைய ஆண்கள்,பெண்கள் என தனித்தனி பிரிவாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் மாநகராட்சி மேயர் கவித்த கணேசன், புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் விளையாட்டுப் போட்டி தொடங்கி வைப்பதற்காக சென்றபோது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மூவரும் ஈட்டி எறிந்து போட்டியினை தொடங்கி வைத்தனர். பின்னர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!