Skip to content

கல்வியே கேடயம்…. அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு….

சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர்,ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45- வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

அப்போது சூர்யா பேசுகையில், “கல்வியே ஆயுதம், கல்வியே கேடயம். சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட, இந்த விழா ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. படிப்புக்காக கொடுக்கப்பட்ட நன்கொடையில் வந்த இடம் இது கிடையாது. நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு அதன் வருமானத்தில் இருந்து கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமே இது. நன்கொடையாக வரும் பணம் படிப்புக்காக மட்டுமே செலவிடப்படுகிறது” என்றார்.

error: Content is protected !!