தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வைத்திலிங்கம் மகன் பிரபு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதுபோல ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் உள்ள வைத்திலிங்கத்தின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடக்கிறது. தஞ்சையில் இருந்து வைத்திலிங்கம் மகன் பிரபுவின் மகன், மனைவி, மாமியார் ஆகியோைரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெலுங்கன்குடி காட்டுக்கு காரில் அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் திரண்டு காரை மறித்தனா். எங்கே அவர்களை அழைத்து செல்கிறீர்கள் என கேட்டனர். விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என கூறினர். அப்படியானால் நாங்களும் வருகிறோம் என தொண்டர்கள் அதிகாரிகளின் காருக்கு முன்னும், பின்னுமாக சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அசோக் நகரில் வைத்திலிங்கம் மகன்கள் நடத்தி வரும் நிறுவனங்களில் சோதனையிட அதிகாாிகள் வந்தனர். அங்கு அந்த அலுவலகங்கள் பூட்டி கிடந்தது. காலை 10 மணி வரை யாரும் வரவில்லை. அலுவலகத்தின் சாவி கிடைக்காததால் அதிகாரிகள் அங்கு 2 மணி நேரமாக காத்திருந்தனர்.
இதுபோல ஒரத்தநாடு அருகே உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற இடத்தில் உள்ள வைத்திலிங்கத்தின் மைத்துனர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.