கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் தான் தென்இந்தியாவில் கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சி பீடத்தில் ஏற்றியவர். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து 2019-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி மீண்டும் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். வயது முதிர்வு காரணமாக கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் 2021-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதிதனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று மாலை எடியூரப்பாவை பா.ஜனதா தலைவர்கள் நேரில் சென்று விழாவுக்கு வருமாறு கூறி அழைப்பிதழ் வழங்கினர். இதையடுத்து எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் கொப்பலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி அலுவலக திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அவர் கொப்பலுக்கு புறப்படும் முன்பு பெங்களூருவிலும், அதன் பிறகு கொப்பலிலும் நிருபர்களிடம் கூறியதாவது…. பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுகிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன். கொப்பல் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது இல்லை என்று முடிவு எடுத்ததாக சொல்வதில் உண்மை இல்லை. அந்த கூட்டத்தில் நான் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்திருந்தேன். சில கட்டாயம் எழுந்ததால் நான் அந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்தேன். கர்நாடகத்தில் அரசியல் ரீதியாக என்னை யாராலும் ஒழிக்க முடியாது. அரசியலில் யாரும் யாரையும் அழிக்க முடியாது. எனக்கு என்று தனி பலம் உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை நான் பலப்படுத்தினேன். கட்சியை ஆட்சியில் அமர வைத்தேன். அதற்காக நான் பாடுபட்டேன் என்று இவ்வாறு தெரிவித்தார்.
