பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், காமராஜ், உதயக்குமார், மணிகண்டன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் பசும்பொன்னில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அளித்த பேட்டி:
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் தேவர் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாட உத்தரவிடப்பட்டது. 1994-ல் சென்னை நந்தனத்தில் தேவரின் முழு உருவ சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு 13.5 கிலோ தங்க கவசத்தை வழங்கி தேவருக்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. இந்த இடத்தில் அரசியல் பேசுவது சரியாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.