அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து விடிய விடிய சித்ரவதை செய்ததுடன், அவர் இருதய நோயால் அவதிப்படும் நிலையிலும் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க விடாமல் அவரது உயிருடன் விளையாடிய நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ஒரு கண்டன அறிக்கையை வீடியோவில் வெளியிட்டார்.
தமிழக முதல்வர் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமான முதல்வர். அப்படி இருக்கும்போது தனது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரை, பாஜகவில் சேரும்படியான நெருக்கடி கொடுத்து, மத்திய அரசின் அமலாக்கத்துறை ஒரு எடுபிடி துறையாக மாறி ஒரு அமைச்சரை தாக்கி டார்ச்சர் செய்ததை ஒரு முதல்வர் எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்.
‘அவர் கண்டிக்காமல் இருந்தால் மற்ற அமைச்சர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் முதல்வரை கேள்வி கேட்குமே. எனவே தான் முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி கைது பின்னணியின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறியும் வகையில் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.
இதைப்பார்த்த பாஜகவினர் அதிர்ந்து போனார்கள். அத்துடன் எடப்பாடியும் இன்று கலக்கத்திலும், விரக்தியிலும் ஒரு வீடியோவை வெளியிட்டார். உங்களால் மட்டும் தான் வீடியோ வெளியிட முடியுமா, நானும் வெளியிடுகிறேன் என்று இன்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு லாவணி கச்சேரி நடத்தி இருக்கிறார். நேற்று முதல்வர் வெளியிட்ட அறிக்கை இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தியா முழுவதும் பேசும்பொருளானது. குறிப்பாக பாஜக வெலவெலத்து போனது. ஆனால் எடப்பாடியின் வீடியோவை அதிமுகவை அதிகரிக்கும் ஊடகங்களும் அதை பெரிதுபடுத்தவில்லை.