கள்ளச்சாராய சாவு கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டம் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவில் ஆளுங்கட்சி்யின் மக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளது. எனவே முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக நாளை அதிமுக சார்பில் சந்தித்து மனு கொடுக்கிறோம். அதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.