Skip to content

எடப்பாடியில் மாணவர்கள் மோதல்- 9ம் வகுப்பு மாணவன் பலி

சேலம் மாவடடம்  எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து  பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது   மாணவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதில்   ஒரு மாணவன்,   கந்தகுரு என்ற 9ம் வகுப்பு மாணவனை தாக்கினான். இதில் கந்தகுரு மயங்கி விழுந்தான்.

உடனடியாக கந்தகுருவை  எடப்பாடியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவன் உடல் நிலை மோசமானதால், சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை மாணவன் கந்தகுரு இறந்தான்.

தகவல் அறிந்ததும் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து   கந்தகுருவை தாக்கிய மாணவனை  போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பள்ளியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!