Skip to content

எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியோடு மோதல் போக்கில் இருந்தார்.   நேற்று முதல்  மோதல் போக்கு  மறைந்து  சகஜ நிலை திரும்பி வருவதாக அரசியல் பார்வையாளா்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் செங்கோட்டையன் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதம் அடைந்துள்ளன” என்று கூறினார்.

இந்த விவாதத்தின் போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அதிமுக ஆட்சியில் 513 பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளனர், அதில் 300க்கும் அதிகமான பள்ளிகளில் உள்கட்டமைப்பு இல்லாமல் இருந்தது. அதையும் சேர்த்து நாங்கள் இன்று கட்டுகிறோம். திமுக ஆட்சியில் 7,600 வகுப்பறைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

மேலும், பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும் போது, முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சரான செங்கோட்டையன் பதிலளிக்க அருகில் இருந்த கடம்பூர் ராஜு கூற,  செங்கோட்டையன் அமைதியாகவே இருந்தார்.  அதிமுக ஆட்சிக் காலத்தில் 2017 முதல் 2021 வரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார் செங்கோட்டையன்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது தனி வழியில் வந்து தனி வழியில் சென்ற செங்கோட்டையன் இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கேண்டினுக்கு உணவு அருந்த சென்றார்.

error: Content is protected !!