அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்று வருகிறது
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி மனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்று உள்ளனர். இதில் உச்சநீதிமன்றத்தில் வரமு் 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ள வழக்கு, ஜனவரி 9ம் தேதி கூட இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர், மக்களவை தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பொருள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.