பாஜகவுடன் சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்பதால் எந்தகாலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூறிவந்தனர்.இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்தார்.அதன் தொடர்ச்சியாக சென்னைக்கு வந்த அமித் ஷா, பழனிசாமியுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து, 2026 தேர்தலில் பழனிசாமி தலைமையில் கூட்டணி என அறிவித்தார்.ஒரு சிலரை தவிர எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகளை ஆலோசிக்காமல் திடீரென முடிவு எடுத்து இருப்பதாகவும் பாஜகவுடன் கூட்டணியால் எந்த பலனும் இருக்காது என அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த அதிருப்தியின் எதிரொலியாக முதற்கட்டமாக எம்எல்ஏக்களுக்கு வரும் 23-ம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பழனிசாமி விருந்தளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விருந்துடன் சூட்கேஸ் கவனிப்பும் இருக்கும் எனவும் பாஜக கூட்டணியால் சோர்ந்துள்ள அதிமுக எம்எல்ஏக்களை உற்சாகப்படுத்த இந்த விருந்தை அவர் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூவத்தூர் பாணியில் விருந்து மற்றும் கவனிப்பு என்பது வரும் மே 2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் எந்தவித சலசலப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது. மே 2ம் தேதியும் செயற்குழு கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கும் இதே பாணியில் விருந்து மற்றும் கவனிப்பு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அதிருப்தியை சமாளிக்க அதிமுக எம்எல்ஏகளுக்கு “கவனிப்பு விருந்து”
- by Authour
