Skip to content

எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டில்லி புறப்பட்டு  செல்கிறார்.  சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியின்  டில்லி  பயணம்  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லியில் கடந்த  சில தினங்களுக்கு முன் அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை சென்னையில் இருந்து காணொளி வாயிலாக  எடப்பாடி திறந்து வைத்தார்.  புதிய அலுவலகத்தை பார்க்க அவர் டில்லி செல்வதாக கூற்பட்டாலும், அவர் அங்கு   சில முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.  வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அவர்    காய்நகர்த்தி வருகிறார். அதற்கான பயணம் தான் இது  என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!