முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், மாணவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை, செங்கோட்டையன் பிரச்னை, வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.