பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பகல் 11.45 மணி அளவில் பசும்பொன் வந்தார். தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.
பின்னர் எடப்பாடி நிருபர்களிடம் பேசியதாவது:
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக போற்றியவர் தேவர். அவரது ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தேவரின் சிலைக்கு தங்க கவசம் அளித்தார். இது தெய்வீக பூமி. அவருடைய நினைவிடத்தில் ஜெயந்தி விழாவில் அதிமுக சார்பாக நானும், முன்னாள் அமைச்சர்களும், தொண்டர்களும், பொதுமக்களோடு வந்து மரியாதை செலுத்தி உள்ளோம்.
இது முக்கியமான நாள். இங்கு அரசியல் பேசுவது நல்லதல்ல. எனவே அடுத்த முறை உங்களை சந்திக்கும்போது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பே ன்.
இவ்வாறு அவர் கூறினார்.