அதிமுக தலைமை நிலைய செயலாளர், எஸ் பி வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். அதிமுக தொடங்கிய பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல், திமுக அரசு முடக்கி வைத்துள்ளனா். திமுக ஐடி குழுவினர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். அதனை ஊடகங்களும் செய்திகளாக வெளியிடுகிறார்கள். அதிமுகவின் பல்வேறு உக்கட்சி பூசல்கள் இருப்பதாக பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகள் வெளியிடுகிறது. கட்சியை சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி . கட்சிக்குள் எந்த பிரச்சனை வந்தாலும், அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின்பு, எடப்பாடி பழனிசாமி எந்த முடிவும் எடுப்பார் . கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை , 2026 ம் ஆண்டு அதிமுக 200 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.