Skip to content

அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.

அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா,தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல செயலாளர் அறிவொளி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.அமைப்புசெயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில்அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் அரவிந்தன்,ஜோதி வாணன்,மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,மாவட்ட பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, ஐ.டி. பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு,
அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஞானசேகர்,சிறுபான்மை பிரிவு அப்பாஸ்,தொழிற்சங்கம் ராஜேந்திரன்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி,கலீல் ரகுமான், நாகநாதர் பாண்டி, ரோஜர் , புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன்,ஏர்போர்ட் விஜி ,கலைவாணன்,
வக்கீல்கள் முல்லை சுரேஷ்,
முத்துமாரி, சசிகுமார்,ஜெயராமன், கௌசல்யா,
மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள் சில்வர் சதீஷ்குமார், டி.ஆர்.சுரேஷ் குமார் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்தர்,இன்ஜினியர் ரமேஷ், எனர்ஜி அப்துல் ரகுமான், புத்தூர் பாலு,
ஐ.டி பிரிவு நாகராஜ், தில்லை விஸ்வா , பூக்கடை முத்துக்குமார், கல்லுக்குழி முருகன்,குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:

கட்சியின் வளர்ச்சிக்கு தொழில் நுட்ப அணியை பலப்படுத்த வேண்டும்.
கட்சிக்காக ஓடியாடி வேலை பார்க்கக்கூடிய இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களை பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும். ஐந்து பூத் கமிட்டி நிர்வாகிகளை ஓர் இடத்தில் வைத்து சந்தித்து கழக பணிகள் குறித்து பேச வேண்டுமென பொதுச்செயலாளர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் 9 பூத் கமிட்டி இருந்தால், அதனை இரண்டாக பிரிக்க வேண்டும்.
பூத் கமிட்டியினரை வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பகுதிவாரியாக நாங்கள் நேரில் சந்திப்போம்.
நமது பொதுச்செயலாளர் வரும் 9-ந் தேதி பூத் கமிட்டியினரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
அவர் மாணவர்களையும், இளைஞர்களையும்  ஒருபோதும் கைவிடமாட்டார்.

கட்சியில் யாரை சேர்க்க வேண்டும். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் பார்த்துக் கொள்வார். அதைப் பற்றி கவலைப்படாமல் நாம் கட்சிப் பணியாற்ற வேண்டும்.
ஒரு விசுவாசி, நமது கட்சிக்கு பொதுச் செயலாளராக வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!