கல்வி நிதி பெறுவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலை தமிழக அரசு ஏற்கிறதா என சட்டமன்றத்தில் இன்று அதிமுக துணைத்தலைவர் உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இது இந்தி திணிப்பு மட்டுமல்ல, பண்பாட்டு அழிப்பு. எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம். தமிழும், ஆங்கிலமும் தான் தமிழகத்தின் இரு மொழி கொள்கை. தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை ஏற்க மாட்டோம்.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இன்று டில்லி சென்று உள்ளார். அவர் எதற்காக டில்லி செல்கிறார். யாரை சந்திக்க போகிறார் என்பதுவும் தெரியும். யாரை சந்திக்க போய் இருக்கிறார் என்ற செய்தியும் வந்திருக்கிறது.
அப்படி யாரை சந்திக்கிறாரோ அவரிடம் இருமொழி கொள்கை குறித்து எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்
இவ்வாறு அவர் பேசினார்.