Skip to content
Home » எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுர்கள்  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி எடப்பாடி 200கிலோ எடையுள்ள கேக் வெட்டினார்.  அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு  மத்திய இணை அமைச்சர்  முருகன்,  மாநில பாஜ தலைவர்  அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீமான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,  அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!