வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்பு துறையினரின் பேரிடர் மீட்பு கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த
அமைச்சர், பருவமழை காரணங்களில் 24 மணிநேரமும் பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில் ; வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு மரங்கள், பேரிடர் உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். மத்தியில் ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு துரோகம் மட்டுமே செய்கிறது என்று எடப்பாடி தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி , எடப்பாடி பழனிச்சாமிதான் மத்திய அரசோடு சேர்ந்து தமிழ்நாட்டிற்கு அதிக துரோகம் செய்பவர் வேறு யாரும் கிடையாது. திமுக துணையோடு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழக மக்களின் நலன் காக்கப்படும் அதில் எந்த சந்தேகமுமில்லை என்று கூறினார். அமைச்சர் செந்தி்பாலாஜி ஜாமின் மறுப்பு குறித்து கேட்ட கேள்விக்கு ; செந்தில் பாலாஜி ஜாமின் மறுப்பு நீதிமன்றத்தின் முடிவு அதில் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார். லியோ படத்தை அமைச்சர் உதயநிதி பார்த்துவிட்டார். படம் நன்றாக இருக்கிறது. நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது என்று கூறினார்.