அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பயண விபரம் :
தஞ்சை, கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாளை 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து இன்று மாலை திருச்சி வருகை தருகிறார். இன்று மாலை 7 மணி அளவில், திருச்சி மாவட்ட எல்லையான அளுந்தூர் பகுதியில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இரவு 8 மணி அளவில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பின் இன்று இரவு திருச்சியில் தனியார் தங்கும் விடுதியில் ஓய்வு.
மறுநாள் 28ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் திருச்சியில் இருந்து புறப்படுகிறார். தஞ்சை மாவட்ட எல்லை பகுதியான செங்கிப்பட்டியில் திருவையாறு தொகுதி சார்பாக 9 மணிக்கு மேல் வரவேற்பு அளிக்கப்படுகிறது,
பின்பு 10.30 மணி அளவில் தஞ்சை சட்டமன்ற தொகுதி வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டு 65 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கழக கொடியை ஏற்றி வைக்கிறார். பின் தஞ்சை புறவழிச்சாலை வழியாக ஒரத்தநாடு செல்கிறார். அங்கு 12 மணி அளவில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து புறப்பட்டு ஒரு மணி அளவில் பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ சிவி சேகர் இல்ல மணவிழாவில் கலந்து கொள்கிறார்.
மதியம் 2 மணி அளவில் கழக அமைப்பு செயலாளர் செந்தில் அண்ணன் மறைவிற்கு, அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார்.
அதன்பின் மூன்று மணி அளவில், முன்னால் எம்எல்ஏ தங்கமுத்து அவர்களின் தாயார் மறைவிற்கு, அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கின்றார்.
பின்னர் அங்கிருந்து ஒரத்தநாடு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில், பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வு.
5.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்று திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
மாலை 6 மணி அளவில் அங்கிருந்து திருச்சி புறப்படுகிறார். 7 மணி விமான மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.