திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அறிக்கையில் கூறியதாவது…. நாளை (28.01.24) தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருைக தரும் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு…. திருச்சி மாநகர் மாவட்ட கழக அஇஅதிமுக சார்பில் இன்று 27.1.2024 சனிக்கிழமை இரவு 8 மணி
அளவில் டி.வி.எஸ் டோல்கேட் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.