கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டம் கடந்த 31 ம் தேதி காலை நடைபெற்றது..தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நகராட்சி ஆணையாளர் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தி கூட்ட அரங்கில் முழக்கம் எழுப்பியதால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது..இச்சலசலப்பினிடையே திமுக கவுன்சிலர் ஒருவர் அங்கிருந்த நாற்காலியை எடுத்து வீசவே பிரச்சினை பெரிதானது..தாக்குதலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர்..போராட்டத்தின் மூன்றாவது நாள் இவ்விவகாரம் தொடர்பாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 8 கவுன்சிலர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்..இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக பொது செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு கண்டன அறிக்கையினை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்..இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
அப்போது பேசிய தலைவர் மெஹரீபா பர்வீன் நகர்மன்ற கூட்டத்தை நடத்த விடக்கூடாது என துவக்கம் முதலே அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு செயல்பட்டனர்..நகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் அலுலக கூட்டத்திற்கு சென்றதால் வர இயலவில்லை பிற அதிகாரிகள் இருப்பதால் கூட்டத்தை நடத்தலாம் என நான் கூறியதை ஏற்காமல் அதிமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்..பெண் தலைவர் என்றும் பாராமல் என்னை ஒருமையில் பேசி தகாத வார்த்தைகள் கூறியதால் திமுக உறுப்பினர் ஆவேசப்பட்டு நாற்காலியை எடுத்து வீசினார்..மேட்டுப்பாளையம் நகராட்சியில் எந்த வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை முடக்கும் விதமாக இது போன்ற உள்ளிருப்பு போராட்டங்கள் அதிமுக வினரால் நடத்தப்படுகிறது..இவ்விகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” என்றார்.
இதனையடுத்து மெஹரீபா பர்வீன் கணவரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான அசரப் அலி
நகராட்சி தூய்மை பணி மேற்கொள்ளும் நிறுவனமான எம். 3 என்ற நிறுவனம் தன்னுடைய என தவறான தகவலை அறிக்கையாக அளித்துள்ளார் நான் ஒரு இஸ்லாமியர் ஒப்பந்தம் எடுத்த நபர் ஒரு இஸ்லாமியர் அவ்வளவு தான் எங்களுக்குள் உள்ள உறவு மற்றபடி எதுவும் இல்லை முழுமையாக எதையும் தெரியாமல் எதிர்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பேட்டியளித்தார்