தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின் இல்லம் திருச்சி தில்லைநகர் 5வது குறுகு்குத்தெருவில் உள்ளது. இந்த இல்லத்திலும், தில்லை நகர் 10 வது தெருவில் உள்ள நேருவின் சகோதரர் ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைக்காக வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சென்னை பதிவன் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.
இதுபோல நேருவில் சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேரு எம்.பி. மற்றம் மகள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் இந்த சோதனை நடக்கிறது. கோவை, சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் கே. என். நேரு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதை அறிந்த திமுக நிர்வாகிகள் அங்கு பெருமளவில் திரண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம் ,காஜாமலை விஜய் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக முக்கிய பிரமுகர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. தேர்தல் முடியும் வரை அடுத்தடுத்து இதுபோன்ற சோதனைகள் நடத்தி திமுகவினரை பயமுறுத்த மத்திய அரசு இந்த வேலையை செய்கிறது என அமலாக்கத்துறை சோதனை்ககு திமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அமைச்சர் கே. என். நேரு வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் அவர் இன்று சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.