கோவை துடியலூர் பகுதியில் உள்ளது லாட்டரி அதிபர் மார்ட்டினின் இல்லம் மற்றும் அலுவலகங்கள். அங்கு இன்று காலை முதல் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவையில் துடியலூரை அடுத்த வெள்ளைக்கிணறு பகுதியில் உள்ள அவரது வீடு உட்பட அலுவலகங்களிலும் அமலாக்க துறையினரின் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோவையில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 4 நாட்கள் வருமான வரித்துணையினரின் சோதனை நடைபெற்றது . அந்த சோதனையின் தொடர்ச்சியாக இன்று ED சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
—