கத்தி, கோலமாவு கோகிலா, வட சென்னை, 2.0, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
லைகா நிறுவனம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருவாயை முறையாக கணக்கு காட்டவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றது.இந்த நிலையில் லைகா நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. சென்னையில் நேற்று காலை 8 மணி முதல் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையானது நேற்று இரவு நிறைவடைந்தது. லைகா நிறுவன சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அமலாக்கத்துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை.