சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு எதிராக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து வந்தது. இதில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். விசாரணையின்போது டாஸ்மாக் ஊழியர்களை நள்ளிரவு வரை வைத்திருந்ததை ஏற்கமுடியாது, ED சோதனை உள்நோக்கம் கொண்டதா என எங்களால் விசாரிக்க முடியாது. இந்த சோதனை சட்ட விரோதமானது அல்ல, தேச நலனுக்கானது என்றும் நீதிபதிகள் கூறினர்.