Skip to content
Home » அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு

  • by Authour

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில்    அமலாக்கத்துறையினர்  இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது.

துரைமுருகனுக்கு சொந்தமான  கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது.  இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதே வீட்டில்  தான்   அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் எம்.பியும் வசிக்கிறார்.

2019ம் ஆண்டு  மக்களவை தேர்தலின்போது வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ. 11 கோடி பணத்தை வருமானவரித்துறை பறிமுதல் செய்தது. இது  தொடர்பாக அமலாக்கத்துறை  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள்.

திமுகவுக்கு  பிரச்னை கொடுக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. இதனை சட்டப்படி  எதிர்கொள்ளுவோம் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.