பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்திவருகிறார்கள்.
