Skip to content

கோகுலம் பைனான்சில் ED ரெய்டு ஏன்? பகீர் தகவல்கள்

  • by Authour

 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து.. முன்னதாக, கடந்த 2017 ம் ஆண்டு இதே கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தின் கேரளா, ஆந்திரா கிளைகள் என ஒரே நேரத்தில் பல்வேறு கிளைகளிலும் சோதனை நடந்தது.

வருமான வரித் துறை அளித்த ஆவணங்களில் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை இன்று சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதற்கிடையில் கோகுலம் நிதி நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது எனக் கூறப்படுகிறது. மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்தப் படம், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது 2002 ம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதால் வலதுசாரி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கு இலக்கானது.

இந்நிலையில், ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்த கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுவருவது கூடுதல் கவனம் பெறுகிறது.

error: Content is protected !!