அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் மற்றும் மகன் உள்ளிட்டோரின் வீடு, நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் ரெய்டு தொடங்கினர். சென்னை, திருச்சி, கோவை என 20 இடங்களில் இந்த சோதனை நடந்தது. நேற்று நேருவின் தம்பியும் டிவிஎச் நிறுவன தலைவருமான ரவிச்சந்திரனை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் இல்லத்தில் அதிகாரிகள் தொடர்ந்து இன்று 3-வது நாளாக சோதனை நடத்துகின்றனர்.
கோட்டூர்புரத்தில் உள்ள டி.வி.எச். நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.
அடையாறு காந்தி நகரில் உள்ள டி.வி.எச் நிறுவன இயக்குநர் ரமேஷ் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
முறைகேடான பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென காரில் அழைத்து சென்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.