மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தற்போது அங்கித் திவாரி மதுரை சிறையில் உள்ளார்.
இந்த வழக்கை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகிறார்கள். மத்திய அரசு அதிகாரிகளை மாநில போலீஸ் விசாரிக்க கூடாது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். தீர்ப்பில், மத்திய அரசு அதிகாரிகள் தவறு செய்தால், அவர்களை கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் மாநில விசாரணைக்குழுவுக்கு இருக்கிறது என்றும் கூறினர்.