அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 330 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் அளிக்க ஏப் 29ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு காலஅவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் துவங்கி தொடர்ந்து அமலாக்கத்துறை பல்வேறு கட்டங்களில் கால அவகாசம் கேட்டு மே 6ம்தேதி வரை இழுத்துக்கொண்டு சென்றாக குற்றச்சாட்டப்பட்டது. மே 8ம் தேதிவரை அமலாக்கத்துறை பதில் அளிக்ககாததால் உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என ஜூலை 10ம் தேதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். இன்றும் நாளையும் மற்றொரு வழக்கில் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க கோரினார். இதற்கு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கை நீட்டிப்பதாக குற்றம்சாட்டினார். செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார் இருப்பதாலும் அவரது உடல் நிலையில் கருத்தில் கொண்டு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் நாளை மறுநாள் (வெள்ளி கிழமை) மதியம் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.
