Skip to content
Home » அமலாக்கத்துறையின் அராஜகம் …..புதிதாக மருத்துவக்குழு அமைக்கிறது

அமலாக்கத்துறையின் அராஜகம் …..புதிதாக மருத்துவக்குழு அமைக்கிறது

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை கைது செய்து 17 மணி நேரம் செய்த டார்ச்சர் காரணமாக  செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருக்கிறது. உடனடியாக பைபாஸ் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று  டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈஎஸ்ஐ ஆஸ்பத்திரி மருத்துவர்களைக்கொண்டு, ஓமந்தூரார் ஆஸ்பத்திரி மருத்துவர்களின் அறிக்கையை ஆய்வு செய்தனர்.  அவர்களும் அமைச்சரின்  உடல் நிலையை அறிந்து பைபாஸ் ஆபரேசன் செய்ய வேண்டும் என கூறினர்.

இந்த நிலையில்  தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் , அமைச்சரின் உடல்நிலையை பரிசோதிக்க  5 டாக்டர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து உள்ளது.  தமிழ்நாடு அரசு  மருத்துவர்கள் உலகம் முழுவதும் பாராட்டும்படியான பல  மருத்துவ சாதனைகள்  புரிந்துள்ள நிலையில் அவர்களது அறிக்கையை ஏற்காமல் இப்போது புதிதாக ஒரு மருத்துவ குழுவை அமைத்துள்ளது  ஓமந்தூரார்  டாக்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த செயலுக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *