அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கையை தொடர்ந்து இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்ததுடன், உடனடியாக அவருக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, முத்துசாமி, மகேஸ், பெரியகருப்பன், கண்ணப்பன், ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆகியோர் இதில் பங்கேற்றனர்.