Skip to content

வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்.. மின்வாரியம் எச்சரிக்கை

  • by Authour

தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.. சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால், சைபர் கிரைம் இணையதளத்தை, https://cybercrime.gov.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். மேலும், 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம். வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!