திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்தவர் குமணன்(45). இவர் துறையூர் மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று தனது சொந்த ஊரான கீரம்பூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக குமணன் அங்குள்ள மின் கம்பத்தில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மின்கம்பத்தில் ஏறுவதற்கு முன்பாக அக்கம்பத்திற்கு மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பர்மரில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். உயிரிழந்த குமணன் சம்பந்தப்பட்ட டிரான்ஸ்பர்மருக்கு பதிலாக தவறுதலாக வேறு ஒரு டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு ஏறியதால் இந்த சம்பவம் நடைபெற்றதாக மின்வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
