Skip to content
Home » 2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

2 ஆண்டு பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு துண்டிப்பு….. மின்வாரியம் உத்தரவு

தமிழ்நாடு மின்வாரிய   வருவாய் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர்  மலர்விழி,  மின்வாரிய அனைத்து  மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில்  கூறியிருப்பதாவது:

மின்வாரிய தலைவர் தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள்  மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை அகற்றுவதோடு, கணக்கையும் முடித்து வைக்க வேண்டும், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார விநியோக சட்டத்தில், “தாழ்வழுத்த பிரிவின் கீழ் மின் இணைப்பு பெற்ற நுகர்வோர், 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத இணைப்பை புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும்.

அவரிடம் இருந்து நிலுவைத் தொகை மற்றும் புதிய இணைப்புக்கான கட்டணத்தை வசூலித்த பிறகே மின் விநியோகம் வழங்க வேண்டும் . இதனை பொறியாளர்கள் பின்பற்ற வேண்டும்  இதையொட்டி, 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டதை நேரடியாக உறுதி செய்வதோடு, கணக்கு முடிக்கும் பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்த வேண்டும், இது தொடர்பான அறிக்கையை வாரந்தோறும் தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் .

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!