சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுகிறார்கள். நாளைய தினம் ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். ஈஸ்டரையொட்டி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள. கொடுந்துயரில் தவிப்போருக்கு விடியல், நீதியை உதிக்க செய்யும் நம்பிக்கையை ஈஸ்டர் வழங்குகிறது என்றுஅவர் தெரிவித்தார்.