கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி கணபதி பூஜை, முளைப்பாரி எடுத்தல் ,குத்து விளக்கு ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் குதிரை,காளை, மாட்டு வண்டி மற்றும் ஏர் கலப்பை ஆகியவை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.
இந்த ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சி பெற்ற சிறுவர் சிறுமிகள் ஆண்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய உடை அணிந்து ஈசன் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆடினர்.இந்த விழாவினை காண கரூர் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வந்திருந்தனர்.